#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை அசின் மகளா இது... எப்படி வளர்ந்து விட்டார் பாருங்கள்... வைரலாகும் புகைப்படம்!!
தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அசின். அதனை தொடர்ந்து விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து சூப்பர் ஹூட் படங்களில் நடித்துள்ளார்.
அசின் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அசின் கடந்த 2016 ஆம் ஆண்டு ராகுல் ஷர்மா என்ற நபரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அரின் என பெயர் வைத்தனர். அசின் இன்ஸ்டாகிராமில் அவ்வளவாக ஆக்டிவாக இருப்பதில்லை. எப்பவாவது புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது 5 வயது ஆகும் மகளின் புகைப்படத்தை கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஆக வெளியிட்டுள்ளார்.