மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நமக்கு பிடித்ததை செய்வதில் எந்த தவறும் இல்லை - கவர்ச்சி குறித்து மனம்திறந்த தர்ஷா குப்தா.. நெத்தியடி பதில்.!
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு படையெடுக்கும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நயன்தாரா, ஹன்சிகா, நிவேதா தாமஸ், ஸ்ரீதிவ்யா என பலரும் முதலில் கால் பதித்தது சின்னத்திரையில் தான்.
பின்னர் தான் அவர்கள் வெள்ளிதிரையில் தடம் பதித்தார்கள். அதேபோல, செய்தி வாசிப்பாளராக பணியை தொடங்கிய பிரியா பவானி சங்கர் முன்னணி நாயகியாக இருந்து வருகிறார். வாணி போஜன், அபிதா, சயத்ரா ரெட்டி போன்ற பலரும் வெள்ளித்திரையில் பணியாற்றுகிறார்கள்.
சின்னத்திரையில் நடித்து மோகன் ஜியின் ருத்ரதாண்டவம் படத்தின் மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுகமான தர்ஷா குப்தா, தற்போது அவர் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இவர் எப்போதும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வது வழக்கம். இந்த விஷயம் தொடர்பாக அவர் கூறுகையில், "ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அதை செய்வதில் எந்த தவறும் இல்லை. ரசிகர்கள் என்னை விரும்புகிறார்கள், நானும் அவர்களை விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.