மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடைசி 10 நிமிஷம் என் இதயத்தையே நிறுத்திட்டாங்க.! மெய்சிலிர்ந்த நடிகை ஜோதிகா!! ஏன் தெரியுமா??
கடந்த அக்டோபர் 31, தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இப்படம் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மேஜர் முகுந்த் கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி இந்துவாக சாய் பல்லவி ஆகியோர் சிறப்பாக நடித்து இருந்தனர்.
படம் மாபெரும் வரவேற்பை பெற்று 150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமரன் திரைப்படத்தை கண்ட நடிகை ஜோதிகா அதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், அமரன் படக்குழுவினருக்கு சல்யூட். ஜெய்பீம் பிறகு மற்றுமொரு தமிழ் சினிமாவின் உன்னதமான திரைப்படம் அமரன். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நீங்கள் வைரத்தைப் படைத்துள்ளீர்கள்.
இதையும் படிங்க: #Breaking: அமரன் படத்தை பார்த்து கண்கலங்கி அழுத ரஜினிகாந்த்; காரணம் என்ன?.. அவரே சொன்ன தகவல்.!
நடிகர் சிவகார்த்திகேயன் இந்த கதாபாத்திரத்திற்காக எவ்வளவு கடினமாக உழைத்து இருப்பீர்கள் என நினைத்து பார்க்க முடிகிறது.சாய் பல்லவி என்னவொரு நடிகை? கடைசி 10 நிமிடங்களில் என் இதயத்தை, மூச்சை நிறுத்திவிட்டார். மிகவும் பெருமையாக உள்ளது.
திருமதி இந்து ரெபேக்கா வர்கீஸ் உங்களின் தியாகமும், நேர்மறையான எண்ணமும் எங்களது இதயங்களைத் தொட்டுவிட்டது.மேஜர் முகுந்த் வரதராஜன் ஒவ்வொரு குடிமகனும் உங்களது வீரத்தை, துணிவினை கொண்டாடுவதை எங்களுடன் இருந்து பார்த்துக்கொண்டிருப்பீர்கள். உங்களைப் போன்றே எங்களது பிள்ளைகளை வளர்க்க விரும்புகிறோம். ரசிகர்களே, தயவுசெய்து இந்த வைரத்தை மிஸ் செய்து விடாதீர்கள் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: அமரன் திரைப்படத்தின் முதல்நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!