மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: அமரன் திரைப்படத்தின் முதல்நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சிவகார்த்திகேயனின் திரைப்பட வாழ்க்கையில், முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய முதல் திரைப்படமாக அமரன் அமைந்துள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், ஸ்ரீகுமார், ஷியாம் மோகன் உட்பட பலர் நடித்து தீபாவளியை அன்று வெளியான திரைப்படம் அமரன் (Amaran).
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார், சிஎச் சாய் ஒளிப்பதிவு பணிகளையும், கலைவாணன் எடிட்டிங் பணிகளையும் திறம்பட மேற்கொண்டு இருந்தனர். ரூ.150 கோடி செலவில், கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் படம் தயாரிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அமரன் படம் எப்படி?.. வெளியானது புளூ சட்டை மாறனின் ரிவியூ..!
அமரன் ட்ரைலர்
தமிழ்நாட்டில் வெளியீடு உரிமைகளை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியது. உலகளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், உட்பட பல மொழிகளில் வெளியான திரைப்படம், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது. படத்தின் வெளியீடுக்கு பின் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
அமரன் ஒருநாள் வசூல்:
இந்நிலையில், அமரன் திரைப்படம் நேற்று ஒரேநாளில் உலகம் முழுவதும் ரூ.42.3 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. நடிகர் சிவகார்த்தியேனனின் திரைப்பட வரலாற்றில், இதுவரை முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையையும் அமரன் கொண்டுள்ளது.
அமரன் வசூல் தொடர்பான அறிவிப்பு
#Amaran 🔥 pic.twitter.com/5MYGad0Rup
— G.V.Prakash Kumar (@gvprakash) November 1, 2024
இதையும் படிங்க: அமரன் படம் எப்படி?.. வெளியானது புளூ சட்டை மாறனின் ரிவியூ..!