வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
முதல்முறையாக அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.? எந்த நடிகருடன் தெரியுமா.!?
கீர்த்தி சுரேஷின் திரைப்பயணம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக வெற்றி கொடிகட்டி பறந்து வருகிறார். தமிழில் முதன் முதலில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் 2015 ஆம் வருடம் கதாநாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.
முதல் படம் வெற்றி பெற விட்டாலும் தனது நடிப்பு திறமையின் மூலம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். இதனை அடுத்து 2016 ஆம் வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் தனது அட்டகாசமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.
இதையும் படிங்க: பிரம்மாண்டம்தான்! இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்திற்கு கீர்த்தி சுரேஷ் கட்டி வந்த புடவையின் விலை இத்தனை லட்சமா??
பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ்
இவ்வாறு தமிழில் வெற்றி நடை போட்டு வரும் கீர்த்தி சுரேஷ், ஹிந்தியிலும் தொடர்ந்து தனது நடிப்பை வெளிப்படுத்த காலடி எடுத்து வைத்துள்ளார். தமிழில் 2016 ஆம் வருடம் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தின் இந்தி ரீமேக் இயக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். பேபி ஜான் என்று பெயரிடப்பட்ட இப்படத்தில் வருன் தவான் கதாநாயகனாக நடித்துள்ளார்.
முத்த காட்சியில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்
இது போன்ற நிலையில் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், முதன் முதலில் இந்தியில் முத்த காட்சியில் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த செய்தி தற்போது திரைத்துறை வட்டாரத்திலும், இணையத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தனது முதல் பாலிவுட் படத்தில் கீர்த்தி சுரேஷ் முத்தக் காட்சியில் நடிக்க ஒத்துக்கொண்டது தமிழ் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்த குட்டி குழந்தை முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த பிரபல நடிகை தெரியுமா.!?