மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. நடிகை நதியாவுக்கு இப்படியொரு பாதிப்பா! வெளிவந்த ஷாக் தகவல்! பதறிய ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நதியா. 80, 90'ஸ் காலகட்டத்தில் பிரபு, சுரேஷ், மோகன் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்துள்ள அவர் இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்கினார். மேலும் பெண்களும் அவருக்கு பெரும் ரசிகர்களாக இருந்தனர்
நதியா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். அவர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்ததன் மூலம் அசத்தலான ரீ என்ட்ரி கொடுத்தார். மேலும் தற்போதும் துள்ளலான இளமையுடன் இருக்கும் அவர் சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை நதியாவுக்கு தற்போது கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் கடந்த மே மாதமே இரு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளார். மேலும் அத்தகைய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.