மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்றும் இளமையில் ஜொலிக்கும் நடிகை நதியாவின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா.. வைரலாகும் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் நடிகை நதியா. இவர் முதலில் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன்பின் 1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தார்.
நதியா தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் 1988 ஆம் ஆண்டு சிரிஷ் காட்போலே என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆன நதியாவுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நதியா ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அப்படத்தில் நதியாவை பார்த்த ரசிகர்கள் எப்படி இவர் இன்னும் இளமையாகவே இருக்கிறார் என்று வியந்தனர்.
இந்நிலையில் தற்போது நதியா தனது பெற்றோருடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.