பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நடிகை நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது: தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு.!
இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகவும், தமிழில் முதல் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள நடிகையாகவும் இருப்பவர் நயன்தாரா. கடந்த சில ஆண்டுகளாகவே நயன்தாரா பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இதில் கோலமாவு கோகிலா, மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருந்தன. சமீபத்தில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், தமன் இசையில், நடிகர்கள் நயன்தாரா, ஜெய், கார்த்திக் குமார், சத்யராஜ், பூர்ணிமா ரவி உட்படட பலரின் நடிப்பில் வெளியான திரைப்படம் அன்னபூரணி.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் ஓடிடி வெளியீடு உரிமைகளை முன்னதாகவே நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் தளத்தில் படம் டிசம்பர் 29 அன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.