மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
8 வயது சிறுவன் ஏமாத்திட்டான்.! அடையார் சிக்னலில் நடந்த ஷாக் சம்பவம்.! குமுறிய நடிகை நிவேதா பெத்துராஜ்!!
தமிழ் சினிமாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நாள் கூத்து என்ற படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதனை தொடர்ந்து அவர் உதயநிதி ஸ்டாலினுடன் பொதுவாக என் மனசு தங்கம், ஜெயம் ரவியுடன் இணைந்து டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன், விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன், பிரவு தேவாவுடன் பொன் மாணிக்கவேல், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை நிவேதா பெத்துராஜ் வெப்சீரிசிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அடையார் சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டது குறித்து வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
அந்த பதிவில் அவர், "அடையார் சிக்னலில் 8 வயது சிறுவனால் ஏமாற்றப்பட்டேன். முதலில் அந்த சிறுவன் என்னிடம் பணம் கேட்டான். நான் இலவசமாக பணம் தர மறுத்ததால், அவன் புத்தகம் ஒன்றை என்னிடம் 50ரூபாய்க்கு விற்க முயன்றான். அப்பொழுது நான் 100 ரூபாயை எடுத்தேன்.
இதையும் படிங்க: பிக் பாஸ் வைல்ட் கார்ட் என்ட்ரி இவர்கள்தான்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
உடனே அந்த சிறுவன் என்னிடம் ரூ.500 கேட்டான். நான் புத்தகத்தை மீண்டும் அவனிடம் கொடுத்துவிட்டு ரூ.100யை திரும்ப வாங்கினேன். உடனே அந்த சிறுவன் புத்தகத்தை காருக்குள் தூக்கி வீசிவிட்டு எனது கையில் இருந்த பணத்தை பறித்து கொண்டு ஓடிவிட்டான்'' என கூறியுள்ளார். மேலும் அந்த பதிவில் அவர், "இப்படி ஆக்ரோஷமாக பிச்சை கேட்கும் பழக்கம் எல்லா இடத்திலும் இருக்கிறதா?? இந்த பிரச்சனையை நீங்கள் சந்தித்துள்ளீர்களா?'' எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: அமரன் படத்தை பார்த்து கண்கலங்கி அழுத ரஜினிகாந்த்; காரணம் என்ன?.. அவரே சொன்ன தகவல்.!