மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிச்சயதார்த்தம் முடிந்த உடனேயே ரொமான்ஸா.. கல்யாணம் எப்போ.? ரசிகர்களின் கேள்வி..
தமிழ் சினிமாவில் 80களின் ஆரம்ப காலகட்டத்தில் பிரபலமாக இருந்து வந்தவர் நடிகை ராதா. இவர் 'அலைகள் ஓய்வதில்லை' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இன்று வரை நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வந்தார். ராதாவிற்கு திருமணமாகி தற்போது இரு மகள்கள் இருந்து வருகின்றனர். இருவருமே தமிழ் சினிமாவில் ஓரளவுக்கு பெயர் பெற்ற நடிகையாகவும் இருந்து வருகின்றனர்.
இது போன்ற நிலையில், இவரது மூத்த மகளான கார்த்திகாவிற்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரவி வந்தது. மேலும் இவர் முதன் முதலில் தமிழில் கோ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
படத்திற்கு பின்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு பெரிதளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை அடுத்து தற்போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த கார்த்திகா நாயரின் நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனையடுத்து இவரது வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் திருமணம் எப்போது என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.