மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
7 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் சூர்யா படத்தில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.! உற்சாகத்தில் ரசிகர்கள்!!
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் நடித்ததன் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஸ்ரேயா. இதில் இரண்டாவது ஹீரோயினாக நடித்த அவர், பின் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த மழை படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின்னர் அவர் நடிகர் தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சிவாஜி, தளபதி விஜய்யுடன் இணைந்து அழகிய தமிழ் மகன் தொடர்ந்து தோரணை, கந்தசாமி, குட்டி, ரௌத்திரம், ஜக்கு பாய் என பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்திருந்தார்.
நடிகை ஸ்ரேயா தெலுங்கு கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 44வது படத்தில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேட்டி ஒன்றில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நான் சூர்யாவின் 44 வது படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளேன். அந்த பாடல் மிகவும் அருமையாக வந்துள்ளது என கூறியுள்ளார். இதுவே ஸ்ரேயா சூர்யாவுடன் இணையும் முதல் படமாகும்.
இதையும் படிங்க: 3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
இதையும் படிங்க: வாயைப்பிளக்கப்போகும் இந்தியத் திரையுலகம்; கங்குவா படம் குறித்து மனம்திறந்த சூர்யா.!