திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
கே.இ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, திஷா பதானி, பாபி உட்பட பலர் நடிக்க உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குவா (Kanguva). படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார்.
எதிர்மறை விமர்சனம் கண்டாலும் தொடர்ந்து ஆதரவு
வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் எடிட்டிங்கில், மதன் கார்க்கி வசனத்தில் படம் தயாராகி இருந்தது. நவ.14 அன்று வெளியான திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் திரையிடப்பட்ட நிலையில், எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் ஒலி தொடர்பான பிரச்சனையால் பொதுமக்களின் ஆதரவை இழந்தது.
3 நாட்களில் 127.50 கோடி வசூல்
எனினும், படத்தை ரசிகர்கள் தொடர்ந்து திரையரங்கில் பார்த்து வருகின்றனர். ஒலி தொடர்பான தொழில்நுட்ப பிரச்சனையும் சரி செய்யப்பட்டு தற்போது பதிவு செய்யப்பட்டு வருவதால், மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கங்குவா திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் ரூ.127.64 கோடி வசூல் செய்துள்ளது. இதன் வாயிலாக கங்குவா திரைப்படம் ரூ.100 கோடி வசூலை சந்தித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாயைப்பிளக்கப்போகும் இந்தியத் திரையுலகம்; கங்குவா படம் குறித்து மனம்திறந்த சூர்யா.!
#Kanguva Soaring strong across borders and barriers 🗡🦅
— Studio Green (@StudioGreen2) November 17, 2024
Worldwide 3 Day gross: 127.64 Crores 🪙
Book your tickets here for #Kanguva
🔗 https://t.co/aG93NEBPMQ #KanguvaRunningSuccessfully@Suriya_offl @thedeol @directorsiva @DishPatani @ThisIsDSP #StudioGreen… pic.twitter.com/1wwqCTHKkH
இதையும் படிங்க: பாலிவுட்டில் எண்ட்ரியா?? ஓபனாக நடிகர் சூர்யா சொன்ன பதில்.! சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!