மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. எம்புட்டு அழகு! நடிகை நதியாவின் அம்மாவை பார்த்துருக்கீங்களா! அப்படியே அவரை மாதிரியே இருக்காங்களே!!
தமிழ் சினிமாவில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நதியா. அவர் 80, 90'ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்கினார். மேலும் இளம்பெண்களும் அவரது ஸ்டைலை பின்பற்றினர். அப்படத்தை தொடர்ந்து நடிகை நதியா பிரபு, சுரேஷ், மோகன் என பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார்.
நதியா தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்ததன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். நடிகை நதியா 1988 ஆம் ஆண்டு சிரிஷ் காட்போலே என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார். அவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் நடிகை நதியா அவ்வப்போது தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் அண்மையில் தனது அம்மாவின் இளவயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் அப்படியே நதியாவை போல இருப்பதாக கூறி வருகின்றனர்.