மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
கோலிவுட்டில் விஷால் நடித்த ஆக்சன், தனுஷின் ஜகமே தந்திரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா. கட்டா குஸ்தி திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடித்து அவர் பிரபலமடைந்தார். மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது.
மேட்ரிமோனி
அனுபவம் :
இதன் மூலம் அவருக்கு நிறைய ரசிகர் கூட்டம் ஏற்பட்டது. இவர் நிறைய மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்ட நிலையில் அதற்கும் கோலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா தனது திருமண வாழ்க்கை குறித்த அனுபவத்தை தான் பகிர்ந்து கொண்டபோது அதை அனைவரும் போலியானதாக நினைத்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "ஒரு டேட்டா கார்டு வச்சிக்கிட்டு" - நெப்போலியன் மகன் திருமணத்தை விமர்சிக்கும் நபர்களுக்கு தரமான பதிலடி.!
சிறுவயதில்
திருமண ஆசை :
அவர் தெரிவித்ததன் படி, திருமணத்திற்கு தாயார் பரிந்துரை செய்ததன் பேரில் மேட்ரிமோனி இணையதளம் ஒன்றில் தனது சுய விவரங்களை அவர் பதிவிட்டதாகவும், இதை பார்த்த பலரும் இது உண்மைதானா என்று நம்ப முடியாமல் இருந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிறுவயதில் அவருக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்ததாகவும், பல்வேறு சூழ்நிலைகளுக்கு பின்னர் பலரது திருமண வாழ்க்கையும் பார்த்த எனக்கு திருமண வாழ்க்கை வெறுத்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருமணமே
வேண்டாம் :
மகிழ்ச்சியே இல்லாத பல திருமண வாழ்க்கையை பார்த்த அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். தற்போது அவருக்கு 34 வயதாகும் நிலையில் இனியும் அவருக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திருமணம் செய்து யாரும் சந்தோஷமாக வாழவில்லை என்றும் அவர் ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதையும் படிங்க: ஜோடி பொருத்தம் சூப்பர்!! கங்கை நதி கரையில் காதலரை கரம்பிடித்த நடிகை ரம்யா பாண்டியன்.! வைரல் புகைப்படங்கள்!!