#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜோடி பொருத்தம் சூப்பர்!! கங்கை நதி கரையில் காதலரை கரம்பிடித்த நடிகை ரம்யா பாண்டியன்.! வைரல் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அதனைத் தொடர்ந்து அவர் ஜோக்கர், ஆண் தேவதை படங்களில் நடித்திருந்தார்.
தொடர்ந்து ரம்யா பாண்டியனுக்கு பெருமளவில் படவாய்ப்புகள் வராத நிலையில் அவர் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களால் பிரபலமானார்.
பின்னர் அவர் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதை கவர்ந்தார். தொடர்ந்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். நடிகை ரம்யா பாண்டியன் மம்முட்டியுடன் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். தற்போது அவரது கைவசம் இடும்பன்காடு என்ற திரைப்படம் உள்ளது.
இந்நிலையில் கடந்த சில காலங்களாக ரம்யா பாண்டியனுக்கு திருமணம் என்ற தகவல் பரவி வந்த நிலையில் அவருக்கு தனது காதலர் யோகா பயிற்சியாளரான லவ்ல் தவான் என்பவருடன் ரிஷிகேஷில் உள்ள ஷிவ்புரியில் கங்கை நதி பாயும் கரையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் கலந்து கொண்டுள்ளனர். ரம்யா பாண்டியனின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
இதையும் படிங்க: ஜப்பானில் கோலாகலமாக நடந்த நடிகர் நெப்போலியன் மகனின் திருமணம்.! குவிந்த முன்னணி பிரபலங்கள்!!