அமரன் படம் எப்படி?.. வெளியானது புளூ சட்டை மாறனின் ரிவியூ..!
சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உட்பட பலர் நடித்து அக்.31 தீபாவளியை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம், மறைந்த மேஜர் முகுந்த் வரத ராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டது. இப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி, ரசிகர்களின் நல்ல வரவேற்பை எப்ற்றுள்ளது. இதனிடையே, திரைப்பட விமர்சகர் நீலச்சட்டை மாறனின் ரிவியூ வெளியாகியுள்ளது.
புளூசட்டை மாறன் விமர்சனம்
அமரன் படம் குறித்து அவர் கூறுகையில், படத்தில் சினிமாவுக்கு மசாலா சேர்த்து மேஜரின் படத்தை எடுத்துள்ளனர். அவரின் சொந்த வாழ்க்கையிலேயே பல மாறுதல் இருக்கிறது. மேஜரின் மனைவி இந்துவின் பார்வையில் படத்தை அவர்கள் எடுத்துள்ளனர். நமது ஹீரோ சிறிய தளபதி கல்லூரி மாணவராக வரும்போது, அவரின் லட்சியமாக இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என இருக்கிறார். இதற்கிடையில் காதல் ஏற்பட்டு, ஹீரோயின் வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. இதற்குப்பின் இராணுவத்தில் இணைந்து, காஷ்மீரில் அவர் பொறுப்பு வாங்குகிறார்.
இதையும் படிங்க: கண்ணே காதல் மொழி பேசுதே.. அடேய் ஜெப்ரி - சவுந்தர்யா.. இப்படித்தான் இருக்கீங்களா?.. லவ்பீகமான பிக் பாஸ் வீடு.!
15 நிமிடம் காட்சியை குறைக்கலாம்
காஷ்மீரில் பயங்கரவாதிகளை எதிர்த்து அவர் போராடுகிறார். இந்த படத்தில் மிகப்பெரிய பிரச்சனை, படத்தின் நிஜம். படத்தில் உண்மைக்கதை என்பதால் நடந்தது, இறுதி தெரியும். படத்தின் ப்ளஸ் என மிலிட்டரி படங்களுக்கு என சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. மிலிட்டரி ட்ரஸ், இசை, தீவிரவாதி கான்செப்ட் போன்றவற்றை மட்டும் வைத்து ரசிகர்களை சுவாரசியமாக இருக்க வைக்க வேண்டும். படத்தின் மைனஸ் ஒவ்வொரு சீனும் நீளமாக இருக்கிறது. படம் 15 நிமிடம் குறைந்து இருந்தால் நன்றாக இருக்கும்.
காட்சிகளில் குளறுபடி
துப்பாக்கி படத்தில் ஹீரோ வில்லனை கொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால், இதில் அது கொஞ்சம் குறைவாக இருக்கிறது. ஒரு தீவிரவாதியை பிடிக்க சென்றபோது, சண்டை இரவெல்லாம் நடந்து திடீரென பகல் வந்துவிட்டதா? அல்லது ஓடும்போது மட்டும் திடீர் பகல் வந்துவிட்டதா? என்பது தெரியவில்லை. நிராயுதபாணியாக இருப்பவரை விசாரித்து உண்மையை வாங்கலாம், ஆனால் என்கவுண்டரில் போட்டுத்தள்ளிவிட்டார்கள். பழைய படங்களில் பட்டாளத்தார் என்றால் மிலிட்டரி உடை, பெட்டியுடன் வருவார். ஊரில் எப்போதும் அவர் அப்படியே இருப்பார். இந்த படத்தில் சிவா ஊருக்கு வரும்போது யூனிபாமுடன் வந்தாலும், டியூட்டிக்கு போகும் போது சாதாரணமாக இருப்பார்.
ஒருமுறை பார்க்கலாம்
படத்தில் மிகப்பெரிய உருப்படியான வேலை என்பது சாய்பல்லவியை தேர்வு செய்தது. சாய்பல்லவியின் நடிப்பு அபாரமாக இருந்தது. சின்ன தளபதி மிலிட்டரி அதிகாரிகள் தோற்றத்துடன் இருந்தார். காசிக்கு போனாலும் கருமம் தொலையாது என்பதைப்போல, தெலுங்கில் மங்கள வாரம் என்ற படம் செவ்வாய்க்கிழமை என தமிழில் வெளியானது. இந்த படத்தில் பயங்கரவாதிகளின் ஏரியாவில் முக்கியத்துவம் கொடுத்து, உளவுத்துறை வேலையை நன்றாக செய்திருந்தால் படம் நன்றாகவே இருந்திருக்கும். குடும்பத்துடன் ஒருமுறை பார்க்கலாம் என கூறினார்.
இதையும் படிங்க: "எம் ஜி ஆர் சென்ற அதே பாதை".. விஜயின் அரசியல் பிரவேசம்., இயக்குனர் மோகன் ஜி கருத்து.!