96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அட்ராசக்க.. காதலை ஏற்றுக்கொண்ட பாவனி.. திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமீர்..! குவியும் வாழ்த்துகள்..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். அதுபோல தனக்கென ஒரு தனி வழியை உருவாக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இதில் பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமடைந்தவர் பாவனி. அவர் பிக்பாஸ் வீட்டில் தனது சகபொட்டியாளரான அமீருடன் நெருங்கி பழகிய நிலையில், அமீர் பாவனியை காதலிப்பதாக ப்ரபோஸ் செய்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களை மையமாக வைத்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சி நடந்துவந்தது. பிபி ஜோடியின் இரண்டாவது சீசனில் டான்சராக பங்குபெற்ற அமீர் மற்றும் பாவனி டான்ஸ் போட்டியில் திருமணம் செய்துகொள்ளும் காட்சிகள் கூட அரங்கேறியிருந்தது.
இந்த நிலையில் பி.பி ஜோடிகள் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் இருவரும் தற்போது வெற்றி கோப்பையை கைப்பற்றி இருக்கின்றனர். அத்துடன் சமூகவலைதளத்தில் நேரடியாக பாவனி, அமீருக்கு ப்ரபோஸ் செய்திருந்தார்.
அதில், நீங்கள் மிகச்சிறந்த மனிதர். உறுதியானவர். மாஸ்டர். நல்ல நண்பர். நமது வாழ்க்கை பயணத்தை சேர்ந்து துவங்கலாம். எனது வாழ்க்கையில் நீங்கள் மிகச் சிறந்த ஜோடியாக இருப்பீர்களா? அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். எனக்காக எப்பொழுதும் இருப்பீர்களா? ஐ லவ் யூ என்று பதிவிட்டிருந்தார்.
இது குறித்து பிரபல நாளிதழில் அமீர் மற்றும் பாவனிக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி வெளியாகியிருந்ததை தொடர்ந்து, அச்செய்தியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அமீர், "திருமண மேளம் விரைவில்" என்று பதிவிட்டிருந்தார். இதன் மூலம் பாவனி மற்றும் அமீரின் திருமணம் உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள்
மேலும், இது தொடர்பாக ரசிகர்களுக்கு தெரியவரவே, இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.