"பாதி மலையை காணும்.. யார் கேள்வி கேட்பா? வயிறெல்லாம் எரியுது" - மோகன் ஜி.!
அடஅட.. என்னா லுக்கு! சும்மா கொல்றீயேமா.! பிகில் தென்றல் புகைப்படத்தால் சொக்கிபோன நெட்டிசன்கள்!!

மாடல் அழகியாக தனது கேரியரை தொடங்கி, பின்னர் திரையுலகில் சில படங்களில் நடிக்கத் துவங்கி ரசிகர்களிடையே பிரபலமானவர் அம்ரிதா ஐயர். இவர் லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பின்னர் அவர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த படை வீரன் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து அவர் அட்லி இயக்கத்தில் பெண்களின் கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக, தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். இப்படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
பின்னர் அம்ரிதா பிக்பாஸ் கவினுடன் இணைந்து லிப்ஃட் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது செம க்யூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.