திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடடே... அஜித் குமாரின் வாழ்க்கையை மாற்றிய ரஜினிகாந்தின் அட்வைஸ்.!! சுவாரசியமான தகவல்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித் குமார். தற்போது இவர் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித் குமாரின் திரை வாழ்க்கையை மாற்றிய சூப்பர் ஸ்டாரின் அட்வைஸ் பற்றிய செய்திகள் தற்போது வெளியாகி இருக்கிறது.
அல்டிமேட் ஸ்டார்
தமிழ் சினிமா ரசிகர்களால் தற்போது தல என்று அன்போடு அழைக்கப்படும் அஜித் , அமராவதி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆரம்பத்தில் சில தோல்விகளை கண்டாலும் ஆசை, காதல் கோட்டை போன்ற திரைப்படங்களின் வெற்றி அஜித்தை அல்டிமேட் ஸ்டார் ஆக உயர்த்தியது. தீனா திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி அஜித் குமாரை தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாற்றியது.
தொடர் தோல்விகள்
வெற்றிகரமாக சென்று கொண்டிருந்த அஜித்குமாரின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. அவரது திரைப்படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்தது. ஜி, பரமசிவன், ஆழ்வார்,திருப்பதி, கிரீடம் என அஜித் குமாரின் அடுத்தடுத்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்தன. இதனால் அஜித் கடும் மன வருத்தத்தில் இருந்திருக்கிறார். அப்போதுதான் சூப்பர் ஸ்டார் வழங்கிய அட்வைஸ் அவரது திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க: ரசிகர்களுக்கு ஷாக்... சினிமாவிலிருந்து விலகும் துஷாரா விஜயன்.!! அவரே பகிர்ந்து கொண்ட அதிர்ச்சியான காரணம்.!!
அஜித் வாழ்வை மாற்றிய சூப்பர் ஸ்டாரின் அறிவுரை
விழா ஒன்றில் அஜித்தை சந்தித்து இருக்கிறார் சூப்பர் ஸ்டார். அப்போது திரை வாழ்க்கை எப்படி சென்று கொண்டிருக்கிறது என அஜித் குமாரிடம் ரஜினிகாந்த் கேட்டிருக்கிறார். இதற்கு பதிலளித்த அஜித் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்திப்பதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த் உங்களுக்கு வில்லத்தனமான நடிப்பு வருகிறது. அதுபோன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடியுங்கள் என அறிவுரை கூறியதோடு தனது பில்லா திரைப்படத்தை ரீமேக் செய்யுமாறு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அஜித்குமார் விஷ்ணுவர்த்தனை அழைத்து பில்லா திரைப்படத்தை ரீமேக் செய்தார். அந்தத் திரைப்படம் அஜித் குமாரின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
இதையும் படிங்க: அடி தூள்... விஜய் சேதுபதியின் மகாராஜா ஓடிடி ரிலீஸ் எப்போது.? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்.!!