திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரசிகர்களுக்கு ஷாக்... சினிமாவிலிருந்து விலகும் துஷாரா விஜயன்.!! அவரே பகிர்ந்து கொண்ட அதிர்ச்சியான காரணம்.!!
தமிழ் சினிமாவில் முண்னனி நடிகையாக வலம் வருபவர் துஷாரா விஜயன். தனுஷ் நடித்து இயக்கி இருக்கும் ராயன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அறிமுகம்
துஷாரா விஜயன் 2019 ஆம் ஆண்டு வெளியான 'போதை ஏறி புத்தி மாறி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். எனினும் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இவரை பிரபலப்படுத்தியது. இதனை தொடர்ந்து நட்சத்திரங்கள் நகர்கிறது திரைப்படத்தில் நடித்த இவர் தற்போது தனுஷின் 50-வது திரைப்படமான ராயன் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
சினிமாவில் இருந்து விலகும் துஷாரா விஜயன்
தனுஷ் நடித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ராயன். இந்தத் திரைப்படம் ஜூலை 26 ஆம் தேதி ரிலீஸ் ஆவதை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்பு ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய துஷாரா விஜயன் தனது 35 வது வயதில் சினிமாவில் இருந்து விலகி விடுவேன் என தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு தனக்கு பிடித்த இடங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்பது அவரது விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார். இவரது இந்த பேட்டி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
இதையும் படிங்க: அடி தூள்... விஜய் சேதுபதியின் மகாராஜா ஓடிடி ரிலீஸ் எப்போது.? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்.!!
இதையும் படிங்க: "ஆர்த்தி செய்த இந்த விஷயம் ஜெயம் ரவியை அப்செட் செய்தது.." பத்திரிக்கையாளர் அந்தணன் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்.!!