#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கையில் சுருட்டு, கொலைவெறி பார்வை.. மிரள வைக்கும் நடிகை அனுஷ்கா.! வெளிவந்த போஸ்டர்!!
நடிகை அனுஷ்கா ஷெட்டி
தமிழ் சினிமாவில் நடிகர் மாதவனுடன் ரெண்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. அதனை தொடர்ந்து அவர் ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல டாப் ஸ்டார்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அனுஷ்கா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் இஞ்சி இடுப்பழகி என்ற படத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படத்திற்காக உடல் எடை அதிகரித்த அவரால் பின் எடையை குறைக்க முடியவில்லை. அதனைத் தொடர்ந்து அவருக்கு பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இவர் கடந்த ஆண்டு மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்ட நடிகை அனுஷ்கா.! அட.. இதுதான் காரணமா?? பரவும் தகவல்!!
வெளிவந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
தற்போது அனுஷ்கா நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அவர் க்ரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் உருவாகவிருக்கும் Ghaati என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் அனுஷ்காவின் பிறந்த நாளையொட்டி Ghaati படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கையில் சுருட்டுடன், கலங்கிய கண்களுடன் வெறித்தனமான பார்வையுடன் அனுஷ்கா உள்ளார்.
இதையும் படிங்க: ஆண்டவரின் பர்த்டே ட்ரீட்.. வெறித்தனமாக வெளிவந்த தக் லைஃப் டீசர்.! அட ரிலீஸ் எப்போ தெரியுமா??