பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஆண்டவரின் பர்த்டே ட்ரீட்.. வெறித்தனமாக வெளிவந்த தக் லைஃப் டீசர்.! அட ரிலீஸ் எப்போ தெரியுமா??
கமலின்
தக் லைஃப்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான உலக நாயகனாக கொடிகட்டி பறக்கும் நடிகர் கமல் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கமல்- மற்றும் மணிரத்னம் கூட்டணி இப்படத்திற்காக இணைந்துள்ளது.
இணைந்துள்ள
நட்சத்திரங்கள்
தக் லைஃப் படத்தில் திரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், அபிராமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் கமலின் பிறந்தநாள் பரிசாக இன்று ரிலீஸ் தேதியுடன் தக் லைஃப்
படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!
வெளிவந்த
டீசர்
படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம்
அடுத்த ஆண்டு ஜூன் 5ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செம மாஸ் ஆக்ஷனுடன் வெறித்தனமாக வெளிவந்த டீசர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அட.. கோட் பட ஜீவிதாவா இது.! தாறுமாறு கிளாமரில் கிறங்கடிக்கிறாரே! திணறும் இளசுகள்!!