திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்னது..பிரேமம் படத்தில் முதலில் மலர் டீச்சராக நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகையா?? இயக்குனர் வெளியிட்ட தகவல்!!
மலையாள சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரும் வெற்றியடைந்த திரைப்படம் பிரேமம். இப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழியிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஹிட்டானது.
மலர் டீச்சர் சாய்பல்லவி
பிரேமம் திரைப்படத்தில் சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். இப்படத்தில் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த கதாபாத்திரம் மலர் டீச்சர். மேலும் படத்தில் சாய் பல்லவி மலர் டீச்சராக நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டார். இன்றும் அந்த கதாபாத்திரம் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகும் திரிஷாவின் பிருந்தா.! எப்போ? எத்தனை மொழிகளில் தெரியுமா??
முதல் சாய்ஸ் நடிகை அசின்
ஆனால் முதலில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது நடிகை அசினாம். இதுகுறித்து பேட்டி ஒன்றில் இயக்குனர் கூறுகையில், முதலில் பிரேமம் படத்தில் வரும் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரம் மட்டஞ்சேரியை சேர்ந்தவராக எழுதினேன். இந்நிலையில் முதலில் அந்த ரோலில் நடிகை அசினை நடிக்க வைக்க முயற்சி செய்தோம். ஆனால் பின்னர் மலர் டீச்சர் கதாபாத்திரம் தமிழாக மாற்றியபின் அதில் சாய் பல்லவியை நடிக்க வைத்தோம் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சினிமாவிலிருந்து விலகிவிடுவேன்.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை துஷாரா விஜயன்!! அதுவும் எப்போ தெரியுமா??