மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காபி கேட் இயக்குனரை கைவிட்ட பாலிவுட்.?! கோலிவுட்டுக்கே திரும்பிய சோகம்.!
பாலிவுட்டை கலக்கிய அட்லி
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அட்லி. இவர் தமிழில் தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற பான் இந்தியா திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.
அட்லியை கைவிட்ட சூப்பர் ஸ்டார்கள்
ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து திரைப்படம் இயக்கவிருந்த நிலையில், தற்போது அந்த திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து திரைப்படம் இயக்குவதாக பரபரப்பு தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்த திரைப்படமும் கைவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "அடி மேல் அடி.." ட்ராப் ஆகிறதா சூர்யா 44.? வெளியான அதிர்ச்சி தகவல்.!!
சூர்யா - அட்லி கூட்டணி
இந்த நிலையில் மீண்டும் தமிழுக்கே திரும்பிய இயக்குனர் அட்லி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சூர்யா குடும்பத்தை தொடர்ந்து நிராகரிக்கிறாரா ஜோதிகா.? வெளியான அதிர்ச்சி தகவல்.!!