திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"அடி மேல் அடி.." ட்ராப் ஆகிறதா சூர்யா 44.? வெளியான அதிர்ச்சி தகவல்.!!
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சூர்யா கங்குவா திரைப்படத்திற்குப் பிறகு புதிய பட வாய்ப்புகள் இல்லாமல் சிக்கலில் இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கங்குவா
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. இதிகாச திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் மிகப் பெரிய பொருட் செலவில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் பட குழுவினர் இருக்கின்றனர்.
ஜகா வாங்கிய சூர்யா
கங்குவா திரைப்படத்திற்குப் பிறகு சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு என்ற திரைப்படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. அந்தத் திரைப்படம் இந்தி எதிர்ப்பை கதைக்களமாக கொண்டிருப்பதால் அதில் நடித்துவிட்டு ஜோதிகா விருப்பப்படி பாலிவுட்டில் எப்படி செட்டிலாவது என்று யோசித்த சூர்யா புறநானூறு திரைப்படத்திலிருந்து விலகி விட்டார். இப்போது புறநானூறு திரைப்படத்தில் நடிக்க தனுஷ் மற்றும் சிவா கார்த்திகேயன் போட்டி போட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஷாக்கிங்... பிளேபாய் பார்த்திபன்.? பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய புதிய சர்ச்சை.!!
சிக்கலில் இருக்கும் சூர்யாவின் எதிர்காலம்.?
சூர்யாவிற்கு எதிர்காலத்தில் நிறைய படங்கள் வரிசையில் இருப்பது போன்று தோன்றினாலும் அவரது கைவசம் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் மட்டுமே இருக்கிறது. இந்தத் திரைப்படத்திலும் 7 வில்லன்களில் ஒரு வில்லனாக நடித்த உரியடி புகழ் விஜயகுமாருக்கும் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இடையே மோதல் ஏற்பட்டதால் விஜயகுமார் சில நாட்களாக படப்பிடிப்பிற்கு வரவில்லை. இதனால் சூர்யா 44 திரைப்படம் தொடர்ந்து நடைபெறுமா என்ற புதிய சிக்கலும் எழுந்திருக்கிறது. தனது மனைவியை நம்பி மும்பையில் செட்டிலாக போன சூர்யா தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் சிக்கலில் சிக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அடி தூள்... கைதி 2 எப்போது.? கார்த்தி கொடுத்த சூப்பர் அப்டேட்.!! குஷியில் ரசிகர்கள்.!!