#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் பகத் பாசிலின் அடுத்த படம்.! புகைப்படத்துடன் படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு!!
மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பகத் பாஸில். இவர் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த கையெழுத்தும் தூரத்து என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். மேலும் அவர் தமிழில் வேலைக்காரன், விக்ரம், மாமன்னன் போன்ற படங்களிலும் அசத்தலாக நடித்து இருந்தார்.
பகத் பாசிலின் ஆவேசம்
அவரது அசத்தலான நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் ஆவேசம்.இந்த படத்தை ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கியிருந்தார். பகத் பாசில் கேங்ஸ்டராக நடித்திருந்த இந்த படம் தற்போது 150 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க: ஜிவி பிரகாஷ் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள்.! கடுப்பான சைந்தவி பதிலடி.! வைரல் பதிவு!!
அடுத்த படம் குறித்த அறிவிப்பு
இதனை தொடர்ந்து பகத் பாசில் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை
திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளார். இப்படத்தை இ4 எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
Associating with Fahadh Faasil, produced by E4 Entertainment, written by Santhi Mayadevi !! @jeethu4ever #FahadhFaasil #e4entertainment #santhiMayadevi pic.twitter.com/2TPIislYco
— Jeethu Joseph (@jeethu4ever) May 16, 2024
இதையும் படிங்க: அப்படி கேட்டேன்! ஆனா.. விடிவி கணேஷை அடித்து தாக்கிய நடிகை ராதா.! வைரலாகும் குக் வித் கோமாளி வீடியோ!!