மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜிவி பிரகாஷ் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள்.! கடுப்பான சைந்தவி பதிலடி.! வைரல் பதிவு!!
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ்குமார், தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமாவின் பிரபல பின்னணிப் பாடகியுமான சைந்தவியை கடந்த 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 2020-ஆம் ஆண்டு அவர்களுக்கு அன்வி என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் திருமணமாகி 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர்.
விமர்சனத்திற்குள்ளான விவாகரத்து
இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளானது. மேலும் அவர்கள் விவாகரத்திற்கு இதுதான் காரணம் என பல வதந்திகளும் பரவி வருகிறது. ஜிவி பிரகாஷ் மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து சைந்தவி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 11 வருஷம் வாழ்ந்தது போதும்... மனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் ஜி.வி பிரகாஷ்..
சைந்தவி பதிவு
அதில், நாங்கள் எங்களுக்கென தனியுரிமை கேட்டபிறகும், ஏராளமான யூடியூப் வீடியோக்கள் தாங்கள் பெற்ற செய்திகளை வைத்து கதைகளை இட்டுகட்டுதலை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எங்களது விவாகரத்து யாருடைய வற்புறுத்தலிளும் ஏற்படவில்லை, மேலும் ஒருவரது கேரக்டரை தோராயமாக எந்த ஒரு ஆதாரமுமின்றி சிதைப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த முடிவு எங்களது முன்னேற்றத்திற்காக இருவரும் பரஸ்பரமாக எடுத்தது. ஜி.வி.பிரகாஷும் நானும் பள்ளிப் பருவத்தில் இருந்தே 24 வருடங்களாக நண்பர்களாக இருந்தோம், அந்த நட்பை இனியும் தொடர்வோம் எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மனதை மிகவும் காயப்படுத்துகிறது.. நடிகர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை!! என்ன கூறியுள்ளார்!!