#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கைதட்டி சந்தோசப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்! கடுப்பாகி திட்டிய பாத்திமா பாபு!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தொடரில் ஓன்று பிக்பாஸ். சீசன் ஓன்று மற்றும் இரண்டு ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று சீசன் மூன்றிற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில் இரண்டு சீசன்களை தொடர்ந்து மீண்டும் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்க சீசன் மூன்று நேற்று ஆரம்பம் ஆனது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தான் வாழும் வீட்டை சுற்றிக்காட்டிய நடிகர் கமல் அதன்பின்னர் பிக்பாஸ் வீட்டை சுற்றி காண்பித்தார். அதன்பின்னர் 15 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ இன்று ஒளிபரப்பானது. அதில், பிக்பாஸ் வீட்டில் சமயல் எறிவாய்விற்கும், தண்ணீருக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கென தனி அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் பிக்பாஸ் கூறுகிறார்.
இதற்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கைதட்டி வரவேற்கின்றனர். இதற்க்கு, போட்டியாளர்களில் ஒருவரான பாத்திமா பாபு அணைத்து போட்டியாளர்களையும் கடிந்துகொள்கிறார். தண்ணீருக்கு கட்டுப்பாடு என்பது கைதட்டி வரவேற்கக்கூடிய விஷயம் அல்ல, அதற்கு நாம் வருத்தப்படவேண்டிய விஷயம் என சாகப்போட்டியாளர்களிடம் கோபமாக கூறியுள்ளார் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு.