மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்ணே காதல் மொழி பேசுதே.. அடேய் ஜெப்ரி - சவுந்தர்யா.. இப்படித்தான் இருக்கீங்களா?.. லவ்பீகமான பிக் பாஸ் வீடு.!
விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த ஆண்டில் 8 வது சீசனில் அடியெடுத்து வைத்தது. கடந்த ஏழு சீசனை தொகுத்து வழங்கிய கமல் ஹாசன், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகியதால், தற்போது விஜய் சேதுபதி அப்பணியை செய்து வருகிறார்.
ஆள்மாறாட்ட பாவனை
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வீட்டில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். எஞ்சிய போட்டியாளர்கள் தீவிரமாக தன்னை ஆட்டத்தில் எடுப்பது வருகின்றனர். நான்காவது வாரமான தற்போது, பிக் பாஸ் போட்டியாளர்கள், வேறொரு நபர்களை போல ஆள் மாறாட்டம் செய்து அவரின் பாவனைகளை வெளிப்படுத்த வேண்டும் என டாஸ்க் கொடுத்திருந்தார்.
இதையும் படிங்க: அர்னவ் போல அள்ளிவிட்ட தர்ஷா குப்தா; வன்மத்தை கக்கி காட்டம்.. சாந்தப்படுத்திய விஜய் சேதுபதி.!
ஜெப்ரி - சவுந்தர்யா கண்ணாலே பேச்சு
இந்த டாஸ்கின்படி பலரும் தங்களின் கதாபாத்திரத்தை மாற்றிக்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே, ஜெப்ரி சவுந்தர்யாவிடம் வழிவதுபோன்று ஒருசில காட்சியை அவர்களின் கதாபாத்திரத்தை ஏற்றுள்ள ரஞ்சித் - ஆர்ஜெ ஆனந்தி ஆகியோர் செய்து காண்பித்தனர்.
இதனைக்கண்ட நெட்டிசன்கள் பலரும் இருவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் இப்படித்தான் இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்புகின்றனர். பிக் பாஷை பொறுத்தமட்டில் இவ்வாறான சர்ச்சை என்பது நமது மொழியிலும், பிற மொழியிலும் புதிதில்லை.
#Ranjith & #RJAnanthi morattu romance performance 😂😂😂
— BB Mama (@SriniMama1) October 29, 2024
Ippadi ellam #Jeffry #Soundariya pannangala 😂😂😂#BiggBoss8Tamil #BiggBossTamil8 #BiggBossTamilSeason8 #BBMama
pic.twitter.com/0xTAJpjy9h
இதையும் படிங்க: மிகப்பெரிய தவறு செய்த அர்னவ்?; கண்டித்து அனுப்பி வைத்த விஜய் சேதுபதி.. பிக் பாஸ் வீட்டுக்குள் பரபரப்பு சம்பவம்.!