விநாயகரை அஜித் கொண்டாடிய அளவிற்கு ஏன் விஜய் கொண்டாடவில்லை? - புளூசட்டை மாறன் கேள்வி.!
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜயின் தி கோட் திரைப்படம், சமீபத்தில் திரைக்கு வந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. வெங்கட் பிரபுவை தூக்கி வைத்து கொண்டாடிய பலரும், தி கோட் திரைப்படத்திற்கு பின் கலவையான பதிலை தெரிவித்து வருகிறார்கள். மேலும், விஜயகாந்தின் ராஜதுரை திரைப்படத்தில் உள்ள சில காட்சிகள், அப்படியே கோட் திரைப்படத்தில் இருப்பதாகவும் குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர்.
வெங்கட் பிரபுவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
இதனால் விஜய்யின் கோட் திரைப்படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், படத்தை பார்த்த விமர்சகர் நீலச்சட்டை மாறனும் தனது கருத்தை முன்வைத்து இருந்தார். இயக்குனர் வெங்கட் பிரபு டீ-ஏஜிங், தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் உட்பட பல்வேறு விஷயங்களில் ரசிகர்ளின் அதிருப்தியை எதிர்கொண்டதாகவும் தெரியவருகிறது.
இதையும் படிங்க: விஜயகாந்தின் ராஜதுரை திரைப்பட கதைதான் கோட்? - வெங்கட் பிரபுவை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்து வராதது ஏன்?
இதனிடையே, நேற்று விநாயகர் சதுர்த்தி திருவிழா பெருவாரியாக சிறப்பிக்கப்பட்டு வந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், அதற்கான வாழ்த்துக்களை தமிழக மக்களுக்கு பதிவு செய்யவில்லை. இதனால் அவர் பிற பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு, எதற்காக விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என வலதுசாரி ஆதரவாளர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மாறன் கேள்வி
இந்நிலையில், திரைப்பட விமர்சகர் புளூசட்டை மாறன், தனது எக்ஸ் பக்கத்தில், "பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்பா கணேசா (வான்மதி). மகா கணபதி (அமர்க்களம்). விநாயக் (மங்காத்தா). விநாயகரை அஜித் கொண்டாடிய அளவிற்கு ஏன் விஜய் கொண்டாடவில்லை?" என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்பா கணேசா (வான்மதி).
— Blue Sattai Maran (@tamiltalkies) September 8, 2024
மகா கணபதி (அமர்க்களம்).
விநாயக் (மங்காத்தா).
விநாயகரை அஜித் கொண்டாடிய அளவிற்கு ஏன் விஜய் கொண்டாடவில்லை? pic.twitter.com/ehBV4zZ52r
இதையும் படிங்க: லண்டன் டூ பாரிஸ்.. இரயில் பயணத்தில் மிகுந்த மகிழ்ச்சி.. உற்சாகத்தில் இளையராஜா..!