விஜயகாந்தின் ராஜதுரை திரைப்பட கதைதான் கோட்? - வெங்கட் பிரபுவை கலாய்க்கும் நெட்டிசன்கள்.!



Venkat Prabhu Copy Cat from Vijayakanth Rajadurai Movie 

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் இசையில், ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மெட் நிறுவனம் தயாரிப்பில், நடிகர்கள் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, யோகிபாபு, மோகன், ஜெயராம், லைலா, சினேகா, வைபவ், பிரேம்ஜி, ஜெயராம், விடிவி கணேஷ், பார்வதி நாயர் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் கோட் (The Greatest of All Time GOAT). 

மாறுபட்ட கருத்துக்களாக விமர்சனம்

இப்படம் செப்டம்பர் 05ம் தேதியான இன்று உலகளவில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் வெளியானது. நேற்று இரவு முதலாகவே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்து வருவோர் மாறுபட்ட கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: லண்டன் டூ பாரிஸ்.. இரயில் பயணத்தில் மிகுந்த மகிழ்ச்சி.. உற்சாகத்தில் இளையராஜா..!

காப்பி-கேட்?

இதனிடையே, கடந்த 1993ம் ஆண்டு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில், நடிகர்கள் விஜயகாந்த், ஜெயசுதா, சிவரஞ்சனி, சுந்தர்ராஜன் உட்பட பலர் நடிப்பில் உருவாகி வெளியான ராஜதுரை திரைப்படத்தின் ஒருசில காட்சிகள் அப்படியே கோட் படத்தில் இடம்பெற்றுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

எஸ்.ஏ.சி-யின் கதையை திருடி வெங்கட் பிரபு படம் இயக்கியதாக குற்றசாட்டு

இதையும் படிங்க: அண்ணாமலையாரை தரிசனம் செய்த நடிகை ஆண்ட்ரியா; கலக்கல் கிளிக்ஸ் இதோ.!