மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ் சூப்பர்... சர்வதேச விருதை வென்ற கேப்டன் மில்லர்.!! படக்குழுவிற்கு குவியும் பாராட்டுக்கள்.!!
தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் லண்டனில் நடைபெற்ற பிரிட்டன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த அயல்நாட்டு திரைப்படத்திற்கான விருதை வென்று சாதனை படைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து திரைத் துறையினர் பலரும் கேப்டன் மில்லர் பட குழுவினரை பாராட்டி வருகின்றனர்.
கேப்டன் மில்லர்
சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த திரைப்படம் கேப்டன் மில்லர். இந்தத் திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. இந்தத் திரைப்படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் குமார் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தத் திரைப்படம் தமிழில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் 90 கோடி ரூபாய் வசூல் செய்தது.
Thank you for the recognition NationalFilmAwards ,UK - Winner Best Foreign Language Film 🙏#CaptainMiller pic.twitter.com/3TngmkDAEE
— Sathya Jyothi Films (@SathyaJyothi) July 4, 2024
தேசிய திரைப்பட விருது
கேப்டன் மில்லர் திரைப்படம் பல்வேறு சர்வதேச விருது விழாவில் பங்கேற்றது. இந்நிலையில் லண்டனில் நடைபெற்ற பிரிட்டன் தேசிய திரைப்பட விழாவிலும் சிறந்த அயலக படங்களுக்கான நாமினேஷன் பட்டியலில் கேப்டன் மில்லர் இடம் பெற்றது. மேலும் இந்தத் திரைப்பட விழாவில் சிறந்த அயலக படமாக கேப்டன் மில்லர் தேர்வு செய்யப்பட்டு அந்தத் திரைப்படத்திற்கு சர்வதேச விருதும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: சூர்யா குடும்பத்தை தொடர்ந்து நிராகரிக்கிறாரா ஜோதிகா.? வெளியான அதிர்ச்சி தகவல்.!!
குவியும் பாராட்டுக்கள்
கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட விருதை பட குழுவின் சார்பாக சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் தியாகராஜன் பெற்றுக் கொண்டார். சர்வதேச அளவில் விருதை வென்ற கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு சினிமா துறையினர் பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடி தூள்... கூலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் பிரபலம்.!! ரசிகர்கள் கொண்டாட்டம்.!!