அடி தூள்... கூலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் பிரபலம்.!! ரசிகர்கள் கொண்டாட்டம்.!!



top-celebrities-to-team-up-rajnikanth-for-coolie-movie

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். கடந்த 40 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக விளங்கி வருபவர். தனது 70 வயதிலும் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார். தற்போது வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி  படப்பிடிப்பில் நடிக்க தயாராகிவிட்டார் ரஜினி. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ள நிலையில் கூலி திரைப்படத்தில் முக்கிய பிரபலம் இணைந்திருப்பதாக தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து ரசிகர்களை உற்சாகத்தில் வாழ்த்தியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

சூப்பர் ஸ்டாரின் 171-வது திரைப்படம்

ஜெயிலர் திரைப்படத்திற்குப் பிறகு ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய ஞானவேலுடன் இணைந்து பணியாற்றுவதாக அறிவித்த ரஜினிகாந்த் தனது 171 வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். கூலி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க இருக்கிறது.

தொடங்கும் படப்பிடிப்பு

ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து அந்தத் திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சிறிது ஓய்விற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மாதம் தொடங்க இருக்கும் கூலி திரைப்படத்தில் இணைய இருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது .

இதையும் படிங்க: வாவ்... ராயன் இசை வெளியீட்டு விழா எப்போது.? ரசிகர்களுக்கு தனுஷ் கொடுத்த சர்ப்ரைஸ்.!!

சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் பிரபலங்கள்

கூலி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ள நிலையில் இந்தத் திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் மற்றும் சுருதிஹாசன் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் சத்யராஜ் ரஜினிகாந்திற்கு வில்லனாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் க்ரிஷ் கங்காதரன் இணைந்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்திற்கான நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வெங்கட் பிரபுவுக்கு செக் மேட் வைத்த சிவகார்த்திகேயன்.!! கோட் ரிலீஸ்-க்கு பிறகு கூட்டணி உறுதியாகுமா.?