மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"எம் ஜி ஆர் சென்ற அதே பாதை".. விஜயின் அரசியல் பிரவேசம்., இயக்குனர் மோகன் ஜி கருத்து.!
விஜய் இன்னும் கொங்கு மக்களையே கவனிக்க வேண்டியுள்ளது, எஞ்சிய பகுதிகளை அவர் பிடித்துவிட்டார் என்பதால், 2026 தேர்தல் மிகக்கடினமான அமையும் என இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார்.
2026ல் சமத்துவ ஆட்சி என்ற கொள்கையை முன்னிறுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தை தோற்றுவித்துள்ள நடிகர் விஜய், வரும் 2 ஆண்டுகளில் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளார். அவரின் கட்சி முன்னோடிகளாக பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், கடலூர் அஞ்சலையம்மாள் ஆகியோர் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கான இயக்கமாக தமிழ் மன்னர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: பழனி பஞ்சாமிருதம் குறித்து அவதூறு; இயக்குனர் மோகன் ஜி-க்கு ஜாமின்; நிபந்தனையை ஆப்படித்த நீதிமன்றம் அதிரடி.!
திமுக-பாஜக எதிர்ப்பு
சமீபத்தில் அக்கட்சியின் மாநில மாநாடும் நடைபெற்ற நிலையில், திமுக, பாஜக கட்சிகளை எதிர்த்து தனது குரலை பதிவு செய்தார். மேலும், பிளவுவாத, ஊழல்வாத அரசியலே தனது கொள்கை எதிரி எனவும் தலைவர்களின் பெயரை குறிப்பிடடாமல் நேரடியாக கட்சியை தாக்கி பேசி இருந்தார்.
ரஜினி-கமல் நிலை
எம்.ஜி.ஆர் ஆருக்கு பின்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கட்சியை தொடங்கிய நபர்களில் விஜய் மிகவும் கவனிக்கப்படுகிறார். முன்னதாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினி அரசியலுக்கு வரவில்லை என அறிவிப்பு வெளியிட்டார், கமலும் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கி, தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்.
தேவருக்கு மரியாதை
இதனிடையே, விஜயின் தவெக அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. விஜயும் தன்னை அரசியலில் நிலைப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். இதனிடையே, இன்று அவர் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜையை முன்னிட்டு, தனது அலுவலகத்தில் தேவர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
இயக்குனர் மோகன் கருத்து
இதனை மேற்கோளிட்டு ஒரு தகவலை பகிர்ந்துள்ள பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசூரன் ஆகிய படங்களின் இயக்குனர் மோகன் ஜி, "எம் ஜி ஆர் அவர்கள் சென்ற அதே பாதை.. இன்னும் கொங்கு பகுதி தான் மிச்சம்.. ஆல் ஓவர் கவர் பண்ணிட்டாப்ல.. 2026 அவ்வளவு சுலபமான தேர்தல் இல்லன்னு மட்டும் தெரியுது.. ஐ அம் வெயிட்ங்" என பதிவிட்டுள்ளார்.
எம் ஜி ஆர் அவர்கள் சென்ற அதே பாதை.. இன்னும் கொங்கு பகுதி தான் மிச்சம்.. ஆல் ஓவர் கவர் பண்ணிட்டாப்ல.. 2026 அவ்வளவு சுலபமான தேர்தல் இல்லன்னு மட்டும் தெரியுது.. ஐ அம் வெயிட்ங்.. https://t.co/npCGd4UvH4
— Mohan G Kshatriyan (@mohandreamer) October 30, 2024
இதையும் படிங்க: எடை பிரச்சனையில் இறக்கிவிடப்பட்ட லக்கேஜ்; பிரபல நடிகைக்கு விமான நிலையத்தில் நடந்த சம்பவம்.! இண்டிகோவுக்கு கண்டனம்.!