மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பழனி பஞ்சாமிருதம் குறித்து அவதூறு; இயக்குனர் மோகன் ஜி-க்கு ஜாமின்; நிபந்தனையை ஆப்படித்த நீதிமன்றம் அதிரடி.!
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசூரன் ஆகிய படங்களை இயக்கி வழங்கியவர் மோகன் ஜி. இவர் சமீபத்தில் பழனி பஞ்சாமிருதத்தில் கருத்தடை மாத்திரைகள் சேர்க்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதாக வீடியோ ஒன்றில் பேசி இருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பழனி கோவில் நிர்வாகத்தினர், மோகன் ஜி-க்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் கைது செய்யப்பட்ட மோகன் ஜி, அன்றைய நாளின் இரவிலேயே பாமக வழக்கறிஞர்களால் சொந்த ஜாமினில் வெளியே கொண்டு வரப்பட்டார்.
இதையும் படிங்க: ரசிகர்மன்ற பொதுச்செயலாளருக்கு பிறந்த குழந்தை; பெயர் சூட்டி மகிழ்ந்த விஜய் சேதுபதி.!
நிபந்தனைகளுடன் ஜாமின்
இந்நிலையில், அவர் தனக்கு முன்ஜாமின் கேட்டு விண்பதிருந்த நிலையில், நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை விதித்து உத்தரவிட்டு இருக்கின்றனர். இதுகுறித்த அறிவிப்பில், "மோகன் ஜி தமிழகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்படும் தமிழ், ஆங்கில நாளிதழில் மன்னிப்பு கேட்டு விளம்பரம் வெளியிட வேண்டும்.
பழனியில் பஞ்சாமிருதம் தயாரிக்கும் பணியில் 10 நாட்கள் சேவை மனப்பான்மையுடன் வேலை பார்க்க வேண்டும்.உண்மையில் அவருக்கு பழனி கோவிலின் மீது அக்கறை இருப்பின், அவர் பழனி கோவிலுக்குச் சென்று தூய்மை பணிகளை மேற்கொள்ளலாம்" என தெரிவித்துள்ளனர்.