மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்... காத்திருக்கும் பிரம்மாண்டம்.!! இந்தியன் 2 விழாவில் ஷங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்.!!
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர். ஜென்டில்மேன், காதலன், இந்தியன், முதல்வன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன் என வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக அறியப்பட்டவர். இவரது இயக்கத்தில் தற்போது இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சியில் தனது எதிர்கால திட்டங்களை விவரித்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
டைரக்டர் ஷங்கர்
ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய இயக்குனர் ஷங்கர் தனது முதல் படத்திலேயே பிரம்மாண்ட முத்திரையை பதித்தார். இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தியன் 2
ஷங்கர், கமல்ஹாசன் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணியில் 1995 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இந்தியன். இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கமல்ஹாசன் உடன் இணைந்து இயக்கினார் ஷங்கர். இந்தத் திரைப்படம் வருகின்ற 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்தியன் 2 திரைப்படத்தின் பிரமோஷன் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் ஷங்கர் அடுத்து வர இருக்கும் தனது படைப்புகள் குறித்து மனம் திறந்து இருக்கிறார்.
இதையும் படிங்க: அடடே... படப்பிடிப்பில் திணறிய வெற்றிமாறன்.!! 5 நிமிடத்தில் சரி செய்து அசத்திய மனைவி ஆர்த்தி.!!
காத்திருக்கும் பிரம்மாண்டங்கள்
இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். மேலும் இதனைத் தொடர்ந்து 2012 என்ற பெயரில் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தத் திரைப்படங்களுக்குப் பிறகு ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஆக்சன் திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த செய்தியால் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: என்னங்கையா இது... அந்த ஆசைக்கு விஜய்யை பயன்படுத்துகிறார் த்ரிஷா.!! சர்ச்சையை கிளப்பிய பாடகி சுசித்ரா.!!