மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னங்கையா இது... அந்த ஆசைக்கு விஜய்யை பயன்படுத்துகிறார் த்ரிஷா.!! சர்ச்சையை கிளப்பிய பாடகி சுசித்ரா.!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவரை வாழ்த்தும் விதமாக நடிகை திரிஷா விஜய்யுடன் லிப்டில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் மற்றும் திரிஷாவை பற்றிய வதந்திகள் இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில் திரிஷாவை பற்றி சர்ச்சையான கருத்தை கூறி மீண்டும் புயலை கிளப்பி இருக்கிறார் பாடகி சுசித்ரா.
ஆர்.ஜே டு கோலிவுட்
ரேடியோவில் ஆர்.ஜேவாக தன்னுடைய கேரியரை துவக்கியவர் சுசித்ரா. பின்னர் படிப்படியாக வளர்ந்து பாடகியாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தார். ஜேஜே, ஆயுத எழுத்து, பலே பாண்டியா மற்றும் கோ போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மங்காத்தா மற்றும் திருட்டுப் பயலே போன்ற திரைப்படங்களில் இவர் டப்பிங் பேசியது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சுசி லீக்ஸ்
சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமா நட்சத்திரங்களை பற்றிய கிசுகிசு செய்திகளையும் புகைப்படங்களையும் சுசி லீக்ஸ் என்ற பெயரில் இணையதளத்தில் வெளியிட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார். இதன் பிறகு சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் தற்போது மீண்டும் சர்ச்சைகளுடன் கோடம்பாக்கத்திற்கு திரும்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: தோழிகளுடன் அலப்பறை செய்யும் ராஷ்மிகா மந்தானா.! வைரலாகும் புகைப்படம்.!?
த்ரிஷா குறித்து சுசித்ராவின் கருத்து
நடிகர் விஜய் மற்றும் திரிஷா பற்றிய செய்திகள் சர்ச்சையை கிளப்பிய நிலையில் நடிகை திரிஷா அரசியல் காரணத்திற்காகத்தான் விஜயுடன் நெருங்கி இருப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் இது தொடர்பாக பேசிய அவர் நடிகை திரிஷாவிற்கு அரசியலில் ஈடுபட ஆசை இருக்கிறது. அதற்காக விஜயை பயன்படுத்த நினைக்கிறார் என தெரிவித்துள்ளார். மேலும் த்ரிஷாவின் தோழியான அதிதி ரவீந்திரநாத் என்பவர் ஜெயலலிதாவிற்கு சசிகலா போல் திரிஷாவுடன் ஒட்டிக் கொண்டிருப்பார் எனவும் தெரிவித்திருக்கிறார். த்ரிஷா பற்றிய சுசித்ராவின் கருத்து தமிழ் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: நடிகைகளோடு நெருக்கம் காட்டும் விஜய் சேதுபதி.? உண்மையை வெளிப்படுத்திய பிரபலம்.!?