#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய்சேதுபதியின் வித்தியாசமான தோற்றத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!!
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் புதிய திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி பெண் வேடமணிந்து நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக நடிகை சமந்தா களமிறங்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். பகத் பாசில், மிஸ்கின், நவீன் விக்ரம் என பல்வேறு நட்சத்திரங்களைக் கொண்டு இந்த படமானது உருவாகி வருகிறது.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதியை பார்க்கும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
Idho...enaku romba pudicha Dir #ThiagarajanKumararaja @itisthatis oda #SuperDeluxe padathoda 1st look 😍😍#SuperDeluxeFirstLook #சூப்பர்டீலக்ஸ் @Samanthaprabhu2 #FahadhFaasil @tylerdurdenand1 @gopiprasannaa @onlynikil pic.twitter.com/8UWxtjbXWK
— VijaySethupathi (@VijaySethuOffl) October 8, 2018