மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதனால் எனது பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை.! இசைஞானி இளையராஜா உருக்கம்!!
தமிழ் சினிமாவில் அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் இதுவரை திரையுலகில் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் பல தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
இசைஞானிக்கு பிறந்தநாள்
இசைஞானி இளையராஜா தனது 81வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் இசைஞானி இளையராஜா சென்னை கோடம்பாக்கத்தில் தன் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
இதையும் படிங்க: இளையராஜாவின் பெயரில் இசை ஆராய்ச்சி மையம் - சென்னை ஐஐடி-யில் அடிக்கல்.!
கொண்டாட்டம் இல்லை
அப்பொழுது அவர் ’என் பிறந்தநாளுக்காக நீங்கள் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுகிறீர்கள். ஆனால் நான் எனது மகளை இழந்த துக்கத்தில் இருப்பதால், இன்று பிறந்த நாளை கொண்டாடவில்லை’ என கூறியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரணி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "பழித்தாரும் வாழ்க.. பகைத்தாரும் வாழ்க.." கவிஞர் வைரமுத்து வெளியிட்ட பதிவு.! இணையத்தில் வைரல்!!