மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளையராஜாவின் பெயரில் இசை ஆராய்ச்சி மையம் - சென்னை ஐஐடி-யில் அடிக்கல்.!
தமிழ் திரையுலகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து, மேஸ்ட்ரோ பட்டம் பெற்ற இசைஞானி இளையராஜா, தொடர்ந்து தனது இசைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். சமீபகாலமாக இசைக்கென தனியாக காப்புரிமை கேட்டும் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்.
ஐஐடியில் இசை ஆராய்ச்சி மையம்
தென்னிந்திய இசை ரசிகர்களை இசையால் கட்டிப்போட்ட இளையராஜா, இந்திய இசை வரலாற்றிலும் மிகப்பெரிய ஜாம்பவானாக இருக்கிறார். இந்நிலையில், நேற்று சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தில், இசையக்னி இளையராஜாவின் பெயரில் இசை ஆராய்ச்சி மையமானது தொடங்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: "பழித்தாரும் வாழ்க.. பகைத்தாரும் வாழ்க.." கவிஞர் வைரமுத்து வெளியிட்ட பதிவு.! இணையத்தில் வைரல்!!
இசைஞானிக்கு கிடைத்த வெற்றி
இந்த மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திரிபுரா மாநில ஆளுநர் என். இந்திரசேனா ரெட்டி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். உடன் இளையராஜாவும் இருந்தார். இது இசைஞானியின் இசை வாழ்வுக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாகவும், வெற்றியாகவும் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: இளையராஜாவின் காபிரைட்ஸ் பிரச்சனை குறித்து வெற்றிமாறன்.! விஜயின் அரசியல் பற்றி கருத்து.!