மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழில் ஜான்வி கபூர் சொன்ன ஒரு வார்த்தை.! தீவிரமாக களத்தில் இறங்கிய ரசிகர்கள்.!
தேவரா 1
ஸ்ரீதேவியின் மகளான நடிகை ஜான்வி கபூர் தெலுங்கில் என்.டி.ஆர் உடன் சேர்ந்து தேவரா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கொரட்டால சிவா இயக்கும் நிலையில், படம் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியிட்டுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் படத்தை புரொமோட் செய்யும் பணியில் பட குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
உணர்ச்சிவசப்பட்ட ஜான்வி
அந்த வகையில் சென்னையில் நேற்று இதன் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகை ஜான்வி கபூர் தமிழில் உரையாற்றியிருக்கிறார். அந்த உரையில், "எல்லோருக்கும் வணக்கம். எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான இடம் சென்னை. என் அம்மாவுடன் இருக்கும் நினைவுகள் எல்லாம் எனக்கு சென்னையில் தான். நீங்கள் எல்லோரும் என் அம்மா மீது காட்டிய அன்பு தான் என்னுடைய குடும்பமும், நானும் நல்ல நிலைமையில் இருப்பதற்கு காரணம். உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். என்னுடைய அம்மாவின் மீது நீங்கள் எந்த அளவிற்கு அங்கு செலுத்தினீர்களோ? அதே அன்பை எனக்கும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இதையும் படிங்க: செய்ய தெரியாமல், ஜான்வி கபூர் செய்த செயல்.! கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்.!
களத்தில் இறங்கிய ரசிகர்கள்
இந்த தேவரா திரைப்படத்திற்கு கடுமையாக உழைத்திருக்கிறோம். அதற்கான பலனை உங்களிடம் எதிர்பார்க்கிறோம்." என்று தெரிவித்துள்ளார். பாலிவுட் ஹீரோயினான ஜான்வி தமிழில் எப்படி பேசுவார் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், அவர் அவ்வளவு அழகாக தமிழில் பேசி அரங்கத்தை ஆச்சரியப்படுத்தினார். ஜான்வி கபூரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இது தீவிர ஆதரவையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!