ஒரே நாளில் ரூ.100 கோடியை நெருங்கிய ஜெயிலர்.. இதோ வசூல் பட்டியல்.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கி நேற்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்ட திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் முதல் காட்சி நேற்று காலை 9 மணிக்கு துவங்கியது.
படம் வெளியாகி 2 நாட்கள் ஆகியும், ரசிகர்கள் அதை இன்னமும் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். பொதுவாகவே, ரஜினி படம் என்றால் ஆரம்ப காலத்தில் இருந்தே வசூலுக்கு பஞ்சம் இருக்காது.
இதனாலேயே இவரை வைத்து படம் இயக்கவும், தயாரிக்கவும் பலரும் முண்டியடித்துக் கொண்டு வருவார்கள். இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ரூ.29.46 கோடிகளையும், நாடு முழுவதும் ரூ.55 கோடிகளையும், உலகம் முழுவதும் ரூ.96 கோடிகளையும் ஒரே நாளில் ஜெயிலர் படம் ஈட்டி உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து தொடர் விடுமுறை வேறு வருவதால் படம் இன்னும் ஓரிரு நாட்களிலேயே ரூ.200 கோடியை தாண்டி விடும் என்று கூறப்படுகிறது.