மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"The New Me" - விவாகரத்துக்கு பின் புதிய ஆளாக மாறிய ஜெயம் ரவி?.. அவரே கூறிய பதிவு.!
தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக இருந்து வந்த ஜெயம் ரவி, சமீபத்தில் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காமல் தோல்வி முகத்தை கண்டு வந்தார்.
இதனிடையே, சமீபத்தில் அவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை தந்ததது.
இதையும் படிங்க: அண்ணாமலையாரை தரிசனம் செய்த நடிகை ஆண்ட்ரியா; கலக்கல் கிளிக்ஸ் இதோ.!
நட்சத்திர ஜோடியாக தமிழ் சினிமாவில் பெரிதும் அறியப்பட்ட ஜெயம் ரவி, திடீரென தனது மனைவியை விவாகரத்து செய்தது பலராலும் நம்ப இயலாமல் இருந்தது. இவ்விவகாரத்து ரவியின் தனிப்பட்ட அறிவிப்பு என அவரின் மனைவி ஆர்த்தியும் விளக்கம் அளித்திருந்தார்.
பிரதர் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரம்
ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் (Brother) திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் ஜெயம் ரவி, சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு இருந்தார்.
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி தனது எக்ஸ் பக்கத்தில் புதிய நான் என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதனை கேப்ஷனுடன் இணைத்து இருக்கிறார்.
இது எந்த அர்த்தத்தில் பதிவிடப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. நெட்டிசன்கள் பலரும் அவரின் விவகாரத்துடன் இணைத்து அத்தகவலை வைரலாக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹேமா கமிட்டி: பெயரை கேட்டாலே வாயை மூடும் தமிழ் நடிகர்கள்..!