மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலிவுட்டில் எண்ட்ரியா?? ஓபனாக நடிகர் சூர்யா சொன்ன பதில்.! சர்ப்ரைஸில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. 38 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக திஷா பதானி நடித்துள்ளார்.
மேலும் பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இந்நிலையில் படம் வெளியாக சில நாட்களே இருக்கும் நிலையில் நடிகர் சூர்யா ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யாவிடம் பாலிவுட் எண்ட்ரி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், ஒரு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு பல விஷயங்கள் முடிவாக வேண்டி இருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்பே பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க நான் தயாராகிவிட்டேன். ஆனால் அந்த திரைப்படத்தின் பணிகள் மெதுவாக நடைபெற்று வருகிறது. நிச்சயம் அந்த திரைப்படம் விரைவில் உருவாகும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் சூர்யா பாலிவுட்டில் கர்ணா படத்தில் நடிக்க உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: தவெக மாநாடை மறைமுகமாக சுட்டிக்காட்டி, சூர்யாவை அரசியலுக்கு அழைத்த நடிகர்; கங்குவா இசை வெளியீடு விழாவில் அதிர்ந்த அரங்கம்.!
இதையும் படிங்க: கங்குவா பாடலில் கவர்ச்சிக்காட்சிகள் - சென்சார் போர்டு ஆப்பு.. தயாரிப்புக்குழுவுக்கு உத்தரவு.!