மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேட்டையனுக்கு வழிவிட்ட கங்குவா; சூர்யா அதிகாரபூர்வ அறிவிப்பு.. காரணம் இதோ.!
சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், நடிகரிகள் சூர்யா உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக சூர்யாவின் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா திரைப்படம், அக்.10, 2024 அன்று திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அக்.10 அன்று வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு சூர்யா - ரஜினி படங்கள் நேரடியாக முதல்முறை மோதிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, கங்குவா படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.
கங்குவா தள்ளிவைப்பு ஏன்?
இந்நிலையில், நடிகர் சூர்யா மெய்யழகன் படவிழாவில் பேசியபோது, "கங்குவா ஒரு குழந்தை. அதனை நீங்கள் பார்த்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கங்குவா படத்தின் ரிலீஸ் விரைவாக அறிவிக்கப்படும். வேட்டையனின் வருகைக்காக கங்குவா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாகின் மிகப்பெரிய அடையாளமாக நடிகர் ரஜினிகாந்த் இருந்துள்ளார். அவரை பார்த்து நாம் வளர்ந்து இருக்கிறோம். அவருக்கு வழிவிடுவதில் நாம் பெருமையடைய வேண்டும். நாம் பார்த்து வளர்ந்த நபருக்காக, தமிழ் சினிமாவின் மூத்தவருக்காக கங்குவா ரிலீஸ் தள்ளிவைக்கப்படுகிறது" என கூறினார்.
“சிவகுமார் பெத்த சிங்கம்” 🫡 @Suriya_offl pic.twitter.com/HPoTewuMSR
— Albert (@albert_ce) September 1, 2024