மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் தி பயர் பாடல் வெளியீடு; இப்போதே கேட்டு மகிழுங்கள்.!
கே.இ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, திஷா பதானி, பாபி உட்பட பலர் நடிக்க உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குவா (Kanguva). படத்திற்கு ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் எடிட்டிங்கில், மதன் கார்க்கி வசனத்தில் படம் தயாராகி இருக்கிறது.
நீண்ட எதிர்பார்ப்பு கொண்ட படம்
ரூ.200 கோடி செலவில் உருவாகி வரும் இப்படம், விரைவில் திரைக்கு வருகிறது. அதற்கான பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. அயன் திரைப்படத்திற்கு பின்னர் பல கதாபாத்திரங்களில் சூர்யா நடித்துள்ள படம் என்பதால், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
தி பயர் பாடல் வெளியீடு
இந்நிலையில், இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தில் இடம்பெற்றுள்ள தி பயர் எனப்படும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 4 நிமிடங்கள் கொண்ட இப்பாடலுக்கு எம்எம் மகாலிங்கம், செந்தில் கணேஷ், ஷெண்பகராஜ், தீப்தி சுரேஷ் ஆகியோர் பின்னணி குரல் பதிவு செய்துள்ளனர். விவேகா வரிகளில் பாடல் உருவாகியுள்ளது. அந்த பாடலை கேட்டு மகிழுங்கள்.
இதையும் படிங்க: டிமாண்டி காலனி 2 படத்தின் ட்ரைலர் அறிவிப்பு; பேய் மிரட்டலுக்கு தயாராகுங்கள்.!
இதையும் படிங்க: ஆகஸ்ட் 23ல் சூரியின் கொட்டுக்காளி திரைப்படம் வெளியீடு; படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு.!