டிமாண்டி காலனி 2 படத்தின் ட்ரைலர் அறிவிப்பு; பேய் மிரட்டலுக்கு தயாராகுங்கள்.!



demonte-colony-2-movie-trailer-on-24-july-2024

 

பிடிஜி யுனிவர்ஸ் தயாரிப்பில், ஆர். அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர்கள் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆண்டி ஜாஸ்கெலைனன், செரிங் டோர்ஜி, அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், சர்ஜனோ காலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் டிமான்டி காலனி 2 (Demonte Colony 2).

டிமாண்டி காலனி 2 பாகத்தின் ட்ரைலர்:
சாம் சிஎஸ் இசையில், ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில், குமரேஷ் டி எடிட்டிங்கில் உருவாகியுள்ள இப்படம், தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்படுகிறது. டிமான்டி காலனி படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. 

படத்தின் டீசர் காட்சிகளும் முன்னதாகவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நாளை (ஜூலை 24) மாலை 5 மணியளவில் படத்தின் டிரைலர் காட்சிகள் வெளியிடப்படுகிறது. அதேபோல, காலை 10 மணியளவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டிமான்டி காலனி டீசர்: