திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இப்படி மாறிட்டாரே! பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலகிய அஞ்சலி! இதுதான் காரணமா?? வீடியோ இதோ!
விஜய் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், அதிரடித் திருப்பங்களுடனும் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா.
இந்த தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் கண்மணி மனோகரன்.
ஆரம்பத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து வந்த அவர் தற்போது மனம் மாறி நல்லவராக நடித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் அஞ்சலியாக நடித்து வந்த கண்மணி அண்மையில் பாரதி கண்ணம்மா தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் விரைவில் புதிய ப்ராஜெக்டில் சந்திப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியலில் ஹீரோயினாக நடிக்கிறார். அமுதாவும் .....ம்? என தற்போது சீரியலின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.