திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வேற லெவல்தான்!! பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் சூரியின் கருடன்.! 5 நாட்களில் இவ்வளவு வசூலா??
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களமிறங்கி தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து ஜொலித்து வருபவர் நடிகர் சூரி. இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். விடுதலை 2 படம் எப்பொழுது ரிலீஸ் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
சூரியின் கருடன்
இந்த நிலையில் சூரி துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான கருடன் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் மே 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பிவருகிறது.
இதையும் படிங்க: வேற லெவல்.. கோடி கோடியாய் அள்ளும் அரண்மனை 4.! 3 நாட்களிலேயே வசூல் இவ்வளவா!!
5 நாட்களில் வசூல் வேட்டை
சூரியின் கருடன் திரைப்படம் வெளிவந்து கடந்த ஐந்து நாட்களில் உலகளவில் ரூ. 20 கோடிக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் வார இறுதியில் வசூல் இன்னும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. சூரி கருடன் திரைப்படத்தை தொடர்ந்து விடுதலை 2, கொட்டுகாளி போன்ற படங்களிலும் கதாநாயகனாக நடிக்கிறார்.
இதையும் படிங்க: செம ஹாட் செல்லம்... அரைகுறை ஆடையில் ஆளை மயக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்!! கிளுகிளுப்பூட்டும் கிளிக்ஸ்!!