மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொங்கல் ரேஸில் இருந்து விலகிய லால் சலாம்.. காரணம் என்ன.?
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. மேலும் ரஜினியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுருந்தது.
இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது கால தாமதமாகும் என கூறப்படுகிறது. அதற்கு காரணம் இந்த படத்தின் சில காட்சிகள் ஹார்ட் டிஸ்கில் இருந்து காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியள்ளது.
இதனையடுத்து தற்போது வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்ப வல்லுனர் ஒருவரை அழைத்து வந்து மாயமான காட்சிகளை மீட்கும் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், அதனால் ரிலீஸ் தேதி மாற்றி வைக்க படக்கூடிய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.